For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உணவு தாமதமானதால் மனைவியைக் கொலை செய்த கணவன்!

இரவு உணவு தாமதமாக கொடுத்ததால் ஆத்திரத்தில் மனைவியை கழுத்தறுத்து கொன்ற மாற்றுத்திறனாளி கணவர்..
09:05 AM Feb 20, 2025 IST | Web Editor
உணவு தாமதமானதால் மனைவியைக் கொலை செய்த கணவன்
Advertisement

திருமுல்லைவாயில் கமலம் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் விநாயகம் (72). மாற்றுத்திறனாளியான இவரது மனைவி தனலட்சுமி (60) பிரிட்டானியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் வீட்டில் இருந்த விநாயகம், மனைவியிடம் இரவு உணவு கேட்டுள்ளார். அப்போது உணவை மனைவி தனலட்சுமி தாமதமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியுள்ளது. இதில் விநாயகம் மனைவி தனலட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

Advertisement

பணி முடிந்து வீட்டிற்கு வந்த மகன், படுக்கை அறையில் தாய் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார், தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு வழங்காத காரணத்திற்காக கணவனே மனைவியை கொலை செய்தது திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement