For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அனல் பறக்கும் தேர்தல் களம் - மார்ச் 1ல் அதிமுக நட்சத்திர பேச்சாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!

12:30 PM Feb 25, 2024 IST | Web Editor
அனல் பறக்கும் தேர்தல் களம்   மார்ச் 1ல் அதிமுக நட்சத்திர பேச்சாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
Advertisement

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள் : வேலைவாய்ப்பு தேவைப்படும் இடங்களுக்கு முதலமைச்சர் தொழில் முதலீட்டை கொண்டு வருகிறார் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

இதுதொடர்பாக அதிமுக வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

"நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி, கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்திடும் வகையில், தேர்தல் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ‘தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம்’ வரும் மார்ச் 1 ஆம் தேதி காலை 10 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் இம்பீரியல் சிராஜ் மஹாலில் நடைபெற உள்ளது.

தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆட்சிகளில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களையும், திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களையும், அரசு மக்களுக்கு இழைத்து வரும் பல்வேறு அநீதிகளையும் பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம், தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

இவ்வாறு அதிமுக வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement