"இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் புனிதமான பண்டிகைகள்" - ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"சைத்ரா நவராத்திரி, உகாதி, குடி பத்வா, செட்டி சந்த் ஆகிய பண்டிகைகளையொட்டி மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இந்த புனிதமான பண்டிகைகள், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், ஆன்மிக விழிப்புணர்வு மற்றும் விருப்பங்களுடன், பாரதிய புத்தாண்டைக் குறிக்கின்றன.
அவை நமது பன்முகத்தன்மை மிக்க வளமான நாகரிக பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத வலிமையையும் ஒற்றுமையையும் உள்ளடக்கி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மை வழிநடத்திய நெறிமுறைகளைப் பிரதிபலிக்கின்றன.
சைத்ரா நவராத்திரி, உகாதி, குடி பத்வா, செட்டி சந்த் ஆகிய பண்டிகைகளையொட்டி மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இந்த புனிதமான பண்டிகைகள், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், ஆன்மிக விழிப்புணர்வு மற்றும் விருப்பங்களுடன், பாரதிய புத்தாண்டைக்… pic.twitter.com/IZFgxWTaFI
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 30, 2025
இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும், அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீதியை வளர்க்கட்டும், நமது தேசத்தை மகத்துவத்தை நோக்கி உந்திச் செல்லட்டும், புகழ்பெற்ற மற்றும் தன்னம்பிக்கை கொண்ட வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ உருவாக்கட்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.