"முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்" - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!
புதுக்கோட்டை மாவட்டம் புதுநிலை பட்டியில் உள்ள கண்ணுடைய அய்யனார் கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். அங்கு கூடியிருந்த கிராம மக்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்த கோயில் இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்படுவதை கிராம மக்கள் எதிர்த்து வந்த நிலையில் இது குறித்து அந்த கிராம மக்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசுகையில்,
"அருள்மிகு கண்ணுடைய அய்யனார் கோயில் அறநிலை துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது எப்போது என்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், இந்த அலுவலகத்தில் தகவல் இல்லை என் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த மார்ச் மாதம் தகவல் கேட்கப்பட்டது. அதற்கு இல்லை என்று பதில் வந்துள்ளது.
இதுவரை இந்த கோவில் அறநிலைத்துறையின் கீழ் இல்லை, ஆனால் இப்போது அறநிலை துறையின் கீழ் கொண்டு வந்ததாக அறநிலைத்துறை நிர்வாகம் நாடகம் போடுகிறது. இந்து சமய அறநிலையில் துறையைப் பார்த்து நான் கேட்கின்றேன்? ஒரு கோவிலை நீங்கள் கையகப்படுத்தி இருந்தால் குறைந்தபட்சம் அதே நிலையில் அந்த கோவிலை பராமரிக்க வேண்டும். ஒரு சர்ச்சையோ பள்ளிவாசலையோ கையகப்படுத்தி அழிய விடுவீர்களா, அப்படி என்றால் அன்றிலிருந்து இன்று வரை அறநிலைத்துறையில் வேலை செய்து வந்த அதிகாரிகள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும்.
அறநிலை துறை அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள். முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்தால் அவர் என்ன பெரிய ஆளா? அவருக்கு அறநிலைத்துறை அதிகாரிகள் அனைவரும் அடிபணிவார்களா? தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலை துறையின் அதிகாரிகள்
கொடுத்த தகவல் இருக்கிறது. என்னிடம் மார்ச் மாதம் வரை இந்த கோவில் அறநிலைத்துறையின் கீழ் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கொடுத்துள்ளீர்கள் அப்படி இருக்கும்போது இப்போது எப்படி நீங்கள் நுழையலாம்?
இந்த கோயில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடாதீர்கள், எந்த விதத்திலும் நீங்கள் தலையிடுவதற்கு உரிமை இல்லை. நீங்கள் ஏன் திடீரென முதலமைச்சரின் அலுவலகத்தில் வேலை செய்யும் காசிநாதன் சொன்னார் என்று சொல்லி உள்ளே வந்து நுழைவீர்களா?
திருவண்ணாமலை சென்று இருந்தேன் உள்ளே நுழையும்போதே ஒரு பக்கமாக வாருங்கள் என்று சொல்லி அனுமதிக்கு நுழைவு கட்டணம் என்று 50 ரூபாய் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு போனால் சாமி பார்ப்பதற்கு என்ன கட்டணம் தரிசன கட்டணம் அர்ச்சனை செய்வதற்கு அர்ச்சனை சீட்டு அபிஷேகம் செய்வதற்கு 2500 ரூபாய். ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு செல்லும் கிறிஸ்தவர்கள் பணமா கட்டுகிறார்?
முருகன் மாநாடு மதுரையில் நடத்தும்போது முத்தமிழ் கடவுள் முருகன் மாநாடு என்று இந்து மதத்தை மலேரியா டெங்கு போல அளிப்பேன் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து நிறைவு உரையாற்ற சொல்லுகிறீர்கள் அவர் அங்கு வந்து என்ன சொன்னார்?
இந்த கோவிலில் நீங்கள் வந்து தலையிடுவதற்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது. இந்துக்கள் அனைவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க நேரிடும் ஏனென்று சொன்னால் அறநிலைத்துறை பட்டியலில் இந்த கோவில் இல்லை. 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் அப்போது அறநிலைத்துறை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.