மாவீரர் அழகுமுத்துக் கோன் பிறந்த நாள் - தவெக தலைவர் விஜய் புகழாரம்!
மாவீரர் அழகுமுத்துக் கோன் பிறந்த நாளில் அவரது தீரத்தையும் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என்று தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
11:07 AM Jul 11, 2025 IST | Web Editor
Advertisement
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்கள்,
Advertisement
— TVK Vijay (@TVKVijayHQ) July 11, 2025
தாய் நிலத்தின் உரிமை காக்க, அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர். வரியும் செலுத்த முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக் கோன் பிறந்த நாளில் அவரது தீரத்தையும் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.