For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி!

02:06 PM May 22, 2024 IST | Web Editor
ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி
Advertisement

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  தொடர்ந்து நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக,  ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்தது.

அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.  அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்தும்,  2024 மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவும் இடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார்.  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை வலியுறுத்தி இந்த ஜாமின் மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று (மே.21) விசாரணைக்கு வந்த போது,  ஹேமந்த சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு எதிா்ப்பு தெரிவித்தாா்.  இந்த நிலையில்,  இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்வு இன்று (மே.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது.   இதனையடுத்து நீதிபதிகள் "டெல்லி முதலமைச்சரின் வழக்குக்கும்,  இவ்வழக்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்தவித நீதிமன்ற உத்தரவும் இல்லை.  ஆனால், ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  அதனால் அவரின் ஜாமீன் மனுவை ஏற்க முடியாது"என்று கூறி ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தனர்.  இதனையடுத்து ஹேமந்த சோரன் தன்னுடைய ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார்.

Tags :
Advertisement