For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மே.வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பலத்த சூறாவளி - 5பேர் உயிரிழப்பு!

08:19 AM Apr 01, 2024 IST | Web Editor
மே வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பலத்த சூறாவளி   5பேர் உயிரிழப்பு
Advertisement

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் திடீர் சூறாவளி தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்

Advertisement

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட  சூறாவளியில் இதுவரை  5 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.   மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள  ராஜார்ஹாட், பர்னீஷ், பகாலி, ஜோர்பக்டி, மாதப்டாங்கா, சப்திபாரி ஆகிய பகுதிகளில் சூறாவளியால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.

இதன் மூலம் பல ஏக்கரில் விளைநிலங்கள், பயிர்கள், ஏராளமான குடிசைகள், வீடுகள், மின் கம்பங்கள் சேதமடைந்தன. அத்துடன் மரங்களும் முறிந்து விழுந்தன.  தற்போதைய நிலவரப்படி சூறாவளியில் சிக்கி ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அரசு மற்றும் பொது  நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் ஜல்பைகுரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் இன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்று சூறாவளியால் பாதித்த மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபற்றி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு  வழங்கும். சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம்.  பேரிடர் மேலாண் முயற்சிகளை மேற்கொண்ட நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நிலைமையை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்” என  தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement