”கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர்” - பிரதமர் மோடிக்கு அமித்ஷா புகழாரம்
இந்திய பிரதமர் மோடி கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அதில் இருந்து தற்போது வரை முதல்வர், பிரதமர் என் சுமார் 24 ஆண்டுகள் மக்களுக்கான சேவையாற்றி வருகிறார்.
இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பிரதமர் மோடி 24 ஆண்டுகளை தேசத்திற்கும் பொது சேவைக்கும் அர்ப்பணித்துள்ளார். மோடி அவர்கள் தன்னலமற்ற மனப்பான்மையுடன் பொது சேவைக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். அவர் அரசியலமைப்புச் சத்தியப்பிரமாணம் எடுத்து, மக்களின் பிரச்சினைகளைத் தன்னுடையதாக கருதி, அவற்றைத் தீர்க்கத் தொடங்கிய இந்த நாள், முழு நாட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த 24 ஆண்டுகளில் குஜராத்தில் விவசாயிகள், பெண்கள், தொழில் மற்றும் கல்வியில் மாற்றம் கொண்டு வருவதில் அல்லது நாட்டின் பாதுகாப்பு, ஏழைகளின் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி சமூகங்கள் உள்பட அனைத்து பிரிவினரையும் மேம்படுத்துவதிலும், பிரதமராக தேசமே முதலில் என்ற தொலைநோக்கு பார்வையுடனும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற திட்டத்துடனும், ஒரு தலைமையானது எப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர முடியும் என மோடி நிரூபித்து உள்ளார்”
என்று தெரிவித்துள்ளார்.