Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Haryana | சட்டமன்ற தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம்!

11:33 AM Aug 25, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

ஹரியாணா பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த ஆக. 16-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, அக். 1-ம் தேதி பதிவாகும் வாக்குகள், அம்மாதம் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலை ஒத்திவைக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. வாக்குப்பதிவு நாளுக்கு முன்பும் பின்பும் தொடர் விடுமுறைகள் வருவதை சுட்டிக்காட்டி ஹரியானா சட்டமன்ற தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மாநில பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ளதாக மாநில பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் மாநில தேர்தல் நிர்வாகக் குழு உறுப்பினருமான வரீந்தர் கர்க் நேற்று (ஆக. 24) தெரிவித்தார். தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மாநில பாஜக கடிதம் அனுப்பியுள்ளதை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பங்கஜ் அகர்வாலும் உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து வரீந்தா் கர்க் கூறுகையில், “ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்குப் பதிவு நாளுக்கு முன்பும் பின்பும் தொடர் விடுமுறைகள் வருகின்றன. செப்டம்பா் 28, 29 வார இறுதி நாள்களாக உள்ளன. வாக்குப் பதிவு நடைபெறும் அக். 1-ம் தேதி தேர்தல் விடுமுறையாக அறிவிக்கப்படும். அக். 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை, 3-ம் தேதி மகாராஜா அக்ரசென் ஜெயந்தி விடுமுறை. இந்த தொடர் விடுமுறை காரணமாக, மக்கள் வெளி ஊர்களுக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது.

எனவே வாக்குப் பதிவு விகிதம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. எனவே, தேர்தலில் அதிக அளவில் வாக்குகள் பதிவாவதை உறுதிப்படுத்தும் வகையில், விடுமுறைகள் முடிந்தபிறகு சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தவேண்டும். எனவே, சட்டப்பேரவைத் தோ்தலுக்கு புதிய தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்நிலையில், தோல்வி பயம் காரணமாகவே தோ்தலை ஒத்திவைக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ஹரியாணாவில் ஆட்சி செய்துவரும் பாஜக, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது.

Tags :
AAPassembly electionBJPCongressNews7Tamilnews7TamilUpdatesRahul gandhi
Advertisement
Next Article