For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிறிய பட்ஜெட், புதுமுக இயக்குநர் என்றாலும் சிறந்த கதையை மக்கள் வரவேற்கின்றனர் - ஹரிஷ் கல்யாண் பேட்டி!

08:18 AM Dec 10, 2023 IST | Web Editor
சிறிய பட்ஜெட்  புதுமுக இயக்குநர் என்றாலும் சிறந்த கதையை மக்கள் வரவேற்கின்றனர்   ஹரிஷ் கல்யாண் பேட்டி
Advertisement

சிறிய பட்ஜெட் என்றாலும் , புதுமுக இயக்குநர்,  புதிய நடிகர் என்றாலும் கதை சிறப்பாக இருந்தால் மக்கள் அதனை வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள் என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Advertisement

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில், நேற்று திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் ‘பார்க்கிங்’ பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

அப்போது, திரையரங்கில் ‘பார்க்கிங்’ படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுடன் இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துரையாடினர். தொடர்ந்து, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசியதாவது, “சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படத்தை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவந்த நிலையிலும், புதுமுக இயக்குநர், நடிகர்கள் இடம்பெற்ற குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல கதையுள்ள திரைப்படங்களை மக்கள் வரவேற்கின்றனர். இந்த ஆண்டில் வெளியான படங்களில் ‘பார்க்கிங்’ திரைப்படம் மிகச் சிறந்த படத்தின் பட்டியலில் இடம்பெறும் என விமர்சனங்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறேன். இதேபோல் பலரும் முன்வந்து உதவ வேண்டும்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “இந்த படம் ரசிகர்களோடு எவ்வாறு இணைக்க முடியும் என உருவாக்கப்பட்டதோ அதுபோல அமைந்திருக்கிறது. ரசிகர்களின் அத்தனை வரவேற்புக்கும், ஊடகத்துறையினரின் ஒத்துழைப்புக்கும் நன்றி” என கூறினார்.

Tags :
Advertisement