"தமிழகத் தாய்மார்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்" - அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு !
சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மகளிர் தின வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும் அங்கீகரித்துப் போற்றவும்,… pic.twitter.com/HPBSlhsRCV
— K.Annamalai (@annamalai_k) March 8, 2025
பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும் அங்கீகரித்துப் போற்றவும், பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும், இந்த நாளில் உறுதி ஏற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.