Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள் - அண்ணாமலை ட்விட்டரில் பதிவு !

தைப்பூச திருநாளையொட்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11:45 AM Feb 11, 2025 IST | Web Editor
Advertisement

முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நேற்று (பிப்.10) முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது.

Advertisement

தைமாதம் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று கூடும் நாளில் தைப்பூசம் திருவிழா கொண்டாப்படுகிறது. அதுவும் இந்தாண்டு முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை வருவது கூடுதல் சிறப்பு என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
AnnamalaiBJPfestivalHappypostedtamil peopleThaipusamTwitter
Advertisement
Next Article