"உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் பிரதமர் மோடி" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!
சென்னை அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் அருகே பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு மற்றும் ஜிஎஸ்டி விளக்க கூட்டமும் நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாககள் பொது மக்கள் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை சேவை வாரம் என அக்டோபர் 2 ஆம் தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மோடி பிறந்தநாள் விழாவில் நாடு முழுவதும் ரத்த தானம் நடைபெற்றது. அதில் பாஜகவினருடன் தொண்டு நிறுவனங்களும் இணைந்து 2 லட்சம் யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதுவரை 4 கோடி பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றத்தை முக்கிய கருத்தாக கொண்டிருக்கும் பாஜக பெண்களின் பெயரில் அந்த வீடுகளுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.
கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு இலவச டாய்லெட் வசதியும், குடிநீர், கேஸ் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசியில் ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட்டு வருகிறதி. இதுவரை 25 கோடி பேர் இந்தியா முழுவதும்
வறுமைக்கோட்டில் இருந்து மேலே வந்துள்ளனர். அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருள்களுக்கு 50% வரை வரியை உயர்த்தி இருக்கிறது. பிரதமர் மோடி இந்தியாவின் பொருட்களை அமெரிக்கா அனுப்பாமல் மற்ற எந்த நாடுகளுக்கு அனுப்ப முடியுமா என ஆராய்ந்து வருகிறார்.
காங்கிரஸ் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ஒரு சிறிய பேனாவை வாங்கினால் கூட வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்தோம் என பெருமை கொள்வார்கள் ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் நம் நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான மதிப்பு கூடியுள்ளது. மோடி பிரதமரான பிறகு நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நாடாக மாறி வருகிறது. உலக அளவில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் நான்காவது நாடாக இந்தியா முன்னேறி உள்ளது. அதேபோல் ஜிஎஸ்டியின் வரியை குறைத்து அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் வாங்கும் அளவிற்கு குறைந்துள்ளது.
குறிப்பாக வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உணவு பொருட்கள் என அனைத்து பொருட்களிலுமே ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு ஏழை எளிய மக்கள் பொருட்களை வாங்கும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும் அம்பத்தூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 900 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு விமான நிலையத்திற்கு இணையாக
மாற்றப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.