ஆளுநரின் தேநீர் விருந்து - காங்கிரஸை தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவனும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "வழக்கம்போல் ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திரதின விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வழக்கம்போல் அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.