ஆளுநர் தேநீர் விருந்து - பாஜக, அதிமுக கட்சிகள் பங்கேற்பு!
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களன்று அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் சார்பில் தேநீர் விருந்திற்கான அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டும் குடியரசு தினத்திற்கான தேநீர் விருந்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த தேநீர் நிகழ்வை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தனர். தொடர்ந்து தமிழ்நாடு அரசும் இந்நிகழ்வை புறக்கணித்தது. பின்பு கடைசியாக தவெக கட்சியும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்தது.
இந்த நிலையில் ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வு இன்று மாலை ராஜ்பவனில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக, அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.