Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மறைந்த மருத்துவர் செரியன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி !

சென்னை முகப்பேரில் உள்ள செரியன் மருத்துவமனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மருத்துவர் செரியன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
12:21 PM Jan 31, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் கே.எம்.செரியன், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 25ம் தேதி உயிரிழந்தார்.

Advertisement

இவர் குழந்தைகள் இதய அறுவை சிகிச்சையிலும் முன்னோடியாக திகழ்ந்தவர். இவரின் மருத்துவ சேவையை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் சென்னை பெரம்பூரிலுள்ள ரயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார்.

இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவர் செரியனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது மலர் வளையம் வைத்து இரங்கல் தெரிவித்த அவர், மறைந்த மருத்துவர் செரியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Tags :
ChennaiDrCherianGovernorhospitalRNRavitribute
Advertisement
Next Article