"தீ விபத்து நடைபெற்ற அரசு மகப்பேறு மருத்துவமனை"... ரூ.100 கோடி நிதியில் மேம்படுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதியில் மருத்துவ கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"அன்மையில் தீ விபத்து நடைபெற்ற தஞ்சை இராசா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனை 100 கோடி ரூபாய் நிதியில் மேம்படுத்தப்படும். 5 கோடி ரூபாய் மதிப்பில் முழு உடற்பரிசோதனை மையம் இன்று தஞ்சை மருத்துவ கல்லூரியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் பரிசோதனை மிக துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி பிரத்யேகமாக திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் கட்டணத்தில் ஏசி வசதியுடன் கூடிய 27 அறைகள் கொண்ட கட்டணப் படுக்கை வார்டும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை இருமடங்காகிவிட்டது. தனியார் மருத்துவமனைக்கு மக்கள் போவதை விட அரசு மருத்துவமனையை நம்பி வருவதாக கூறியவர் 46 கோடி ரூபாய் செலவில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் பேசியவர், மக்களை தேடி மருத்துவத்தில் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் கண்டறியும் திட்டத்திற்கு ஐநா சபை விருது கிடைத்துள்ளது. கிராமங்களில், மலை கிராமங்களிலும் பாம்புக்கடி, நாய்க்கடி மருத்துவம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருத்துவர் பணியிடங்களும் நிரப்ப பட்டுள்ளதாக" தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.