#Governor தேநீர் விருந்தில் கலந்துகொண்ட விவகாரம் : காரணம் என்ன? - கனிமொழி எம்பி பேட்டி!
கட்சிக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன, முதலமைச்சருக்கு சில கடமைகள் உள்ளன என ஆளுநர் தேநீர் விருந்து கலந்துகொண்ட விவகாரத்திற்கு கனிமொழி எம்பி கருத்து தெரிவித்தார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் பலியான
கோர சம்பவத்திற்காக கேரள அரசுக்கு நிவாரண நிதி திரட்டும் விதமாக கன்னியாகுமரி
மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து
தக்கலை பேரூந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு நாள் தேநீர் கடை
திறந்து வைத்து நிவாரண நிதி திரட்டினர்.
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்
தொகை வழங்க கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் டி ஒய் எஃப் ஐ சார்பில்
அமைக்கப்பட்ட தேநீர் கடையில் கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் மனோ
தங்கராஜ் உள்ளிட்டோர் நிதி வழங்கி தேநீர் அருந்தினர். இதனைத் தொடர்ந்து, கனிமொழி கருணாநிதி எம்பி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"அதிமுக செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடப்பட்டது. நல்ல மாற்றம் தான் ஆனால், இது காலம் கடந்த நிகழ்வு. ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொண்ட விவகாரத்தில், கட்சிக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதுபோல் முதலமைச்சருக்கு சில கடமைகள் உள்ளன. இதில் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லை. திமுக பொறுத்தமட்டில் யாரும் கலந்துகொள்ளவில்லை அமைச்சரவையில் முக்கியமான அமைச்சர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள் : ஆவணி மாத பூஜை – #Sabarimala நடை திறக்கப்பட்டது : நாளை முதல் பக்தர்கள் அனுமதி!
பாஜக தலைவராக இருப்பததால் தான் நாணய வெளியிட்டு விழாவில் அண்ணாமலை கலந்துகொள்கிறார். மத்திய அரசாங்கம் நாணயத்தை வெளியிடுகிறார்கள். மத்திய அமைச்சர்களும் நாணயத்தை வெளியிடுகிறார்கள் அதில் எப்படி தமிழ்நாடு பாஜகவினருக்கு மாற்று கருத்து இருக்கமுடியும்.” என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
திமுக இந்தியா கூட்டணியை விட்டுவிட்டு பாஜகவுடன் மெல்ல மெல்ல போகிறதா என பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு .. ” நான் திமுகவில் தான் இருக்கிறேன்.எனக்கு தெரிந்து அப்படி எந்த எண்ணமும் இல்லை" என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.