Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்!

09:53 PM Mar 02, 2024 IST | Web Editor
Advertisement
அதிமுகவில் அண்மையில் இணைந்த நடிகரும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம்.  இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். பின்னர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.  இதனிடையே அவர் விசிகவில் இணையவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Advertisement

இந்த நிலையில், காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:

"நடிகையும், நடன இயக்குநருமான காயத்திரி ரகுராம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.  கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AIADMKedappadi palaniswamiElection2024EPSgayathri raguramWomens Wing
Advertisement
Next Article