For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

10:43 AM Dec 28, 2023 IST | Web Editor
 விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை    முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை(டிச.28) காலமானார்.  அவரது இறுதிப் பயணத்தில் முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும்,  சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது.  இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அன்பிற்கினிய நண்பர் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்  மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.  நடிகராக,  நடிகர் சங்கத் தலைவராக,  அரசியல் கட்சித் தலைவராக,  சட்டமன்ற உறுப்பினராக,  எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.

தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கருணாநிதி தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த்,  நடிகர் சங்கத்தலைவராக இருந்த போது கருணாநிதியின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர்.

விஜயகாந்த் கதாநாயகனான நடித்த 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில்,  கருணாநிதி எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது.  அவருடனான நட்பு எந்தக் காலத்திலும்,  எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை.  இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த மிகத் துயரமான சூழலில்,  என்னை நானே தேற்றிக் கொண்டு,  கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும்,  தேமுதிக தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement