Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!!

07:26 PM Nov 05, 2023 IST | Web Editor
Advertisement

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

Advertisement

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதில் முதல்கட்டமாக 20 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதேசமயம் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் நவம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

மிசோரத்துக்கு நேரடியாக செல்லாமல் விடியோ மட்டும் வெளியிட்டு பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டார். பிரமர் மோடியுடன் ஒரே மேடையில் பரப்புரையில் பங்கேற்க மாட்டேன் என்று மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா தெரிவித்திருந்தார். மிசோரம் முதல்வர் ஜோரம் தங்காவின் முடிவால் அங்கு பரப்புரைக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
#Electionsமிசோரம்assembly electionsBJPChhattisgarhCongressMizoramMizoram CMmodinews7 tamilNews7 Tamil UpdatesParliament Election 2024PM ModiRahul ganthiZoramthanga
Advertisement
Next Article