டெல்லியில் மாநிலங்களவை எம்பிக்கள் குடியிருப்பில் தீ விபத்து..!
டெல்லியின் பிடி மார்க்கில் மாநிலங்களவை உறுப்பினர்கள் வசிக்கும் பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
05:13 PM Oct 18, 2025 IST | Web Editor
Advertisement
டெல்லியின் பிடி மார்க்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசிக்கும் பிரம்மபுத்ரா அடுக்குமாடி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு கடந்த 2020ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
Advertisement
இந்த நிலையில் இந்த பிரம்மபுத்ரா குடியிருப்பில் இன்று மதியம் 1.20 மணியளவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 10 மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இதனை தொடர்ந்து சுமார் பிற்பகல் 2.10 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.