For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜ்கோட் சிறார் விளையாட்டு மைதானத்தில் தீ விபத்து - 20 பேர் உயிழப்பு! ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

10:02 PM May 25, 2024 IST | Web Editor
ராஜ்கோட் சிறார் விளையாட்டு மைதானத்தில் தீ விபத்து   20 பேர் உயிழப்பு  ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) உள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஒரு அறையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது. இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நிகழ்விடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

தற்போது வரை மீட்புப் பணியானது நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளான சிறுவர், சிறுமியர் வந்துள்ளதால் அவர்களில் பலர் இதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்கப்ப்ட்ட சடலங்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடம் யுவராஜ் சிங் என்பவருக்கு சொந்தமானது என அறியப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் பலர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement