பிளாஸ்டிக் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளது.
சென்னை அயப்பாக்கம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய கடை உள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்தில் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து நாசமடைந்துள்ளது.
இதையும் படியுங்கள் ; ‘ஸ்குவிட் கேம் 2’ ரிலீஸ் எப்போது..? - புதிய அப்டேட்..!
இதையடுத்து, கடையின் உரிமையாளர் பாலு கொடுத்த தகவலின் பெயரில் திருமுல்லைவாயில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மேலும், கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆவடி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னதாக, பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீயானது அருகில் இருந்த கூரை வீட்டிலும் பரவி முழுமையாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.