For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட்! பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

02:47 PM Jul 11, 2024 IST | Web Editor
ஜூலை 23 ல் மத்திய பட்ஜெட்  பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Advertisement

2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். 

Advertisement

18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் மீண்டும் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் அளித்த திருமணப் பரிசு! என்ன தெரியுமா?

இதனைத் தொடர்ந்து,  ஜூலை 22 -ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடருக்கு பதிலாக நிதி நிலைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில், ஜூலை 23-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

கூட்டத்தொடரின் முதல் நாள் ஜூலை 22 ஆம் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7 -ஆவது நிதிநிலை அறிக்கையாகும்.

Tags :
Advertisement