For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#AnnapurnaHotel விவகாரம் : நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் நாளை போராட்டம்!

05:55 PM Sep 13, 2024 IST | Web Editor
 annapurnahotel விவகாரம்   நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் நாளை போராட்டம்
Advertisement

அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது.

Advertisement

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து சரமாரிக் கேள்விகளை எழுப்பினார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அவர் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மன்னிப்பு கோரினார். நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் அவர் தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் என பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதையடுத்து வணிகர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளதாவது:

"இந்த விவகாரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பின்னணியில் பாஜகவினரின் பல்வேறு மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளான சீனிவாசனை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மூலமாக நிர்ப்பந்தப்படுத்தி நிதியமைச்சரை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வரவழைத்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். இந்நிகழ்வு சமூக ஊடகங்களில் பாஜகவினரால் திட்டமிட்டு பரப்பப்பட்டது.

இதையும் படியுங்கள் :PorscheGT3 கார் வாங்கிய நடிகர் அஜித்! எத்தனை கோடி தெரியுமா?

இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மக்களை சந்திக்காமலேயே, வாக்குகளை பெறாமலேயே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்று மத்திய அமைச்சராக நீண்டகாலமாக நீடித்து வருகிற நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்கிற்கு தமிழ்நாடு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அதற்குரிய விலையை கொடுப்பதிலிருந்து அவர் தப்ப முடியாது.

மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு சட்டத்தை வளைத்து பல்வேறு சலுகைகள் செய்கிற பாஜக அரசு, சாதாரண சிறு, குறு தொழில் முனைவோர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து எங்களை காப்பாற்றுகிற வகையில் ஒரே வரியாக மாற்றுங்கள் என்ற கோரிக்கையை பரிசீலிக்க நிர்மலா சீதாராமன் தயாராக இல்லை. நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று நிர்மலா சீதாராமன் கூறியபோது, ஒரு நிருபர் மணிப்பூர் கலவரம் குறித்து கேள்வி கேட்ட போது, இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று பேசியிருக்கிறார். ஏற்கனவே, பாஜக மீது தமிழ்நாடு மக்களுக்கு இருக்கிற வெறுப்பு நிர்மலா சீதாராமனின் அராஜக போக்கு காரணமாக பலமடங்கு கூடிவருவதையும், பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதையும் எவராலும் தடுக்க முடியாது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

"நாளை(14.09.2024) சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் கோயம்புத்தூர் காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணா ஓட்டல் எதிரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோயம்புத்தூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறேன்"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement