Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெண் IT ஊழியர் எரித்து கொலை - முன்னாள் காதலன் கைது!

11:43 AM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

பொன்மார் அருகே பெண் மென்பொறியாளர் எரித்து கொலை செய்யபட்ட வழக்கில் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை, கால்கள் கட்டபட்ட நிலையில் எரித்து கொலை செய்யப்பட்டார்.  இதன் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நாவலூர் மப்பேடு பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் நந்தினி (25) என்பது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக நந்தினியின் முன்னால் காதலரான வெற்றி (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.  போலீசார் நடத்திய விசாரணையில் வெற்றியும், நந்தினியும் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்ததும், நந்தினி வெற்றியை விட்டு விலகி வேறு ஒருவரை காதலித்து வந்ததால் வெற்றி நந்தினியை கொலை செய்ததும் தெரியவந்தது.  வெற்றி, நந்தினி ஆகிய இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய கேப்டன் ஹர்திக் பாண்டியா?

பின்னர் வெற்றி திருநங்கை என்பது நந்தினிக்கு தெரியவந்திருக்கிறது.  இதனால் நந்தினி வெற்றியை விட்டு விலகி கடந்த ஒரு வருடமாக ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இதனால் கோபமடைந்த வெற்றி நந்தினியை பலமுறை எச்சரித்துள்ளார்.  இதனை சற்றும் பொருட்படுத்தாத நந்தினி ராகுலுடன் காதலை தொடர்ந்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வெற்றி நந்தினியை கொலை செய்வதென முடிவு செய்துள்ளார்.  இந்த நிலையில் நந்தினியின் பிறந்தநாளன்று வெற்றி அவரை கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.  பின்னர் நந்தினியிடம் நம்பிக்கையை ஏற்படுத்த ஆதரவற்ற இல்லத்திற்கு  சென்று உணவு வழங்கியுள்ளார்.

பின்னர் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக தாழம்பூர் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.  அங்கு நந்தினியின் கை, கால்களை சங்கிலியால் கட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார்.  இதனால் நந்தினி வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார்.  உடனே ஏற்பாடாக எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Tags :
ArrestChennaiCrimeinvestigationnews7 tamilNews7 Tamil UpdatesPolice
Advertisement
Next Article