For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சட்ட விரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்ட விவசாயி வெட்டிக்கொலை! போலீசார் விசாரணை!

07:43 AM Aug 16, 2024 IST | Web Editor
சட்ட விரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்ட விவசாயி வெட்டிக்கொலை  போலீசார் விசாரணை
Advertisement

ஓசூர் அருகே சட்ட விரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்ட விவசாயி
வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஓசூர் அருகே உள்ள சின்ன பேளகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (65).
விவசாயியான இவருக்கு ரத்தினமா என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகளும்
உள்ளனர். இந்த சூழலில் இவரது மூத்த மகள் சின்ன புட்டம்மாவின் மகனான வேல்முருகனுடன் (பேரன்) இருசக்கர வாகனத்தில் மத்திகிரி காவல் நிலையத்துக்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்கு கையெழுத்திட முனிராஜ் நேற்று சென்றிருந்தார்.

காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில்
வீட்டிற்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது மத்திகிரி கால்நடை பண்ணை அருகே சென்றபோது அவர்கனை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மூவர் முனிராஜ் சென்ற இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளினர். இதில் முனிராஜும் அவரது பேரன் வேல்முருகனும் கீழே விழுந்தனர்.

இதனையடுத்து தகராறில் ஈடுபட்ட அவர்கள், முனிராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முனிராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்ன பேளகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிலர் கர்நாடக மாநில மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை முனிராஜ் தட்டி கேட்டுள்ளார். இதனால் அந்த மதுபான விற்பனையாளர்களுக்கும் முனிராஜுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தாகவும், இந்த முன்விரோதம் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

Tags :
Advertisement