#FactCheck | தாவூத் இப்றாகிமுக்கு சிவசேனா #CleanChit வழங்கும் என சஞ்சய் ராவத் பேசினாரா?
This news Fact Checked by The Quint
உத்தக் தாக்கரே தலைமையிலான அரசு அமைந்தால் தாவூத் இப்ராகிமுக்கு "கிளீன் சிட்" வழங்கப்படும் என சஞ்சய் ராவத் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து விரிவாக காணலாம்
மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
மகராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், தனது கட்சி தலைமையிலான அரசு அமைந்தால் தப்பியோடிய தாவூத் இப்ராகிமுக்கு "கிளீன் சிட்" வழங்கப்படும் என்று கூறியதாகக் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவின் கேப்சனில் “உத்தவ் தாக்கரே முஸ்லிம்களுக்கு அளித்த புதிய வாக்குறுதி இது எனவும் தாக்கரே, பவாரின் தலைமையிலான ஆட்சியமைந்தால் தாவூத்துக்கு க்ளீன் சிட் கொடுப்பார்” என சஞ்சய் ராவத் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தது.
சஞ்சய் ராவத் அப்படி பேசினாரா ? - உண்மை என்ன?
சஞ்சய் ராவத் பேசியதாக வைரலான வீடியோவின் சில கீஃப்ரேம்களை வைத்து தி குயிண்ட்டின் வெப் கூஃப் இதன் உண்மைத் தன்மையை சரிபார்ப்புக்கு உட்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வீடியோவின் கீ பிரேம்களில் பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் தேடலுக்கு உட்படுத்தியபோது மராத்தி செய்திச் சேனலான புதாரி நியூஸ் பகிர்ந்த YouTube வீடியோ கிடைத்தது. சஞ்சய் ராவத் ஊடகங்களுக்கு அளித்த இந்த பேட்டியானது 23 அக்டோபர் 2023 அன்று பகிரப்பட்டுள்ளது.
- பரப்பப்படும் வைரல் வீடியோவானது 15:53 நேரத்திலிருந்து தொடங்குகிறது. அதில் அவர் "பாஜக அரசு தாவூத் இப்ராஹிமுக்கு ஒரு நாள் க்ளீன் சிட் கொடுத்து அவர் குற்றமற்றவர் என தெரிவிக்கும். தேர்தல்களின் போது ராம் ரஹீம் , சோட்டா ஷகீல் போன்ற பலரையும் அவர்கள் குற்றமற்றவர்கள் எனச் சொல்வார்கள். அதேபோல தாவூத் இப்ராஹிமும் மத்திய அரசிடமிருந்து க்ளீன் சிட் பெற முடியும். அவர்கள் நினைத்தால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஸ்டாம்ப் போட்டு குற்றமற்றவர்கள் என சான்றளிக்க முடியும்” இவ்வாறு பதிலளித்திருப்பார்.
- மாறாக இந்த வீடியோவில் எங்கேயும் தனது கட்சி ஆட்சியமைத்தால் தாவூத் இப்ராஹிமுக்கு க்ளீன் சிட் கொடுக்கும் என்று சஞ்சய் ராவத் குறிப்பிடவில்லை. ஹிண்டன்பர்க் வழக்கில் SEBI தலைவர் மாதபி பூரி புச்சிற்குக் கொடுக்கப்பட்ட க்ளீன் சிட் பற்றிய கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பதில் செய்தி நிறுவனமான ANI ஆல் பகிரப்பட்டுள்ளது.
முடிவு :
உத்தக் தாக்கரே தலைமையிலான அரசு அமைந்தால் தாவூத் இப்ராகிமுக்கு "கிளீன் சிட்" வழங்கும் என சஞ்சய் ராவத் பேசியதாக பரவும் வீடியோ போலியானது என நிரூபணமாகியுள்ளது.
Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.