“அருமையான பேச்சு..” - பிரியங்கா காந்தியை பாராட்டிய ராகுல் காந்தி!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை நிகழ்த்திய நிலையில் தனது சகோதரியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பிரியங்கா காந்தி கடந்த நவம்பர் 28ல் மக்களவையின் உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மக்களவையில் இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் மக்களவையில் வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி முதன்முறையாக உரை நிகழ்த்தினார்.
அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அதற்கான விவாதம் இன்று நடைபெற்றது. அதில் நமது அரசியல் சாசனம் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பாதுகாப்பு கவசம். ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த பாதுகாப்பை உடைத்தெரிய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.
சம்பல் மற்றும் மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் அரசியலமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் விதி புத்தகம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவரும் பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் கூறியது,
"அருமையான பேச்சு.. எனது முதல் உரையை விட மிகவும் சிறப்பாக இருந்தது என்று பாராட்டியுள்ளார். மக்களவையில் பிரியங்கா காந்தியின் முதல் உரை அதிரடியாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு" என தெரிவித்துள்ளனர்.