For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" - வி.கே.சசிகலா பேட்டி

12:49 PM Jan 17, 2024 IST | Web Editor
 திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்    வி கே சசிகலா பேட்டி
Advertisement

"திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்"  என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு  முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

”புரட்சி தலைவர் எம். ஜி.ஆரின் வளர்ச்சி திமுகவில் இருக்கும் ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதனால் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அவர் வெளியேறினார்.  எம். ஜி.ஆர் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.  எம். ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் எந்த முறை கையாளபட்டதோ அதே முறையை நானும் கையாளுகிறேன்.

இப்போது தமிழகத்தில் நடக்க கூடிய ஆட்சியால் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.  திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் "பாக்கெட்டில்" இருந்து பணத்தை எடுத்துவருகின்றனர்.  முதலமைச்சர் என்றால் 10 வாகனம் மத்தியில் செல்வது அல்ல, அதற்கு பெயர் முதலமைச்சர் அல்ல,  மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அம்மா உணவகம் அனைத்தும் பூட்டபட்டு இருந்தது.

ராமர் கோவில் அயோத்தியில் கட்டியதில் தவறில்லை.  ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான திட்டம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.  கலைஞர் நூற்றாண்டுகாக அவசரமாக திறக்க வேண்டும் என்று திட்டமிடாமல் திறக்கப்பட்டது.  மக்கள் அங்கு உணவு இல்லாமல் கஷ்டபட்டு வருகின்றனர்.  ஒரு அமைச்சருக்கு பல பொறுப்புகள் வழங்கினால் எப்படி அவர்கள் பணி செய்ய முடியும்.

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.  ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை, எல்லா விரலும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.  ஜல்லிக்கட்டில் பெரிய குளறுபடி நடக்கிறது.  அமைச்சர்கள் கூறும் மாடுக்கு மட்டுமே பரிசு என்று கூறுகிறார்கள். தமிழ் நாட்டிற்கு வேண்டிய நிதியை மத்திய அரசிடம் முறையாக கேட்டு வாங்க வேண்டும். அப்படி இல்லாமல் "உங்க அப்பன் வீடு சொத்தா? என்று கேட்பது சரி அல்ல “ என சசிகலா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement