For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் - நாக் அவுட் சுற்றில் இத்தாலி, ஸ்பெயின்!

10:36 AM Jun 26, 2024 IST | Web Editor
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்   நாக் அவுட் சுற்றில் இத்தாலி  ஸ்பெயின்
Advertisement

யூரோ 2024 கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான இத்தாலி அணியும்,  முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியும் தகுதி பெற்றுள்ளன.

Advertisement

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.  இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலி - குரோஷியா அணிகள் மோதின.  முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.  54-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.  இதில் லூகா மோட்ரிச் அடித்த ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் கியான்லூகி அற்புதமாக தடுத்தார்.  எனினும் அடுத்த நிமிடத்திலேயே லூகா மோட்ரிச் கோல் அடித்து அசத்தினார்.  இதனால் குரோஷியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் குரோஷியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டன.  இதில் 42 விநாடிகளே எஞ்சியிருந்த நிலையில் இத்தாலி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி விரைவாக கடத்தி கொடுத்த பந்தை மாட்டியா சக்காக்னி அற்புதமாக கோல் வலைக்குள் திணிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

இதன் மூலம் இத்தாலி அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அல்பேனியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Tags :
Advertisement