#Erode கிழக்கு இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள் : 8 மாதங்களாக #Fridge-ல் இருந்த பெண்ணின் உடல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (ஜன.10) தொடங்கியது. இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டி மற்றும் தங்கள் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. நாதக தனித்துப் போட்டி என அறிவித்தது.
தொடர்ந்து, திமுக சார்பில் வி.சி.சந்திரசேகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும், இதில் அதிமுக போட்டியிடாது எனவும் அக்கட்சியியின் பொதுச்செயலாளலர் பழனிசாமி அறிவித்துள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற விக்ரவாண்டி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.