அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை !
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் 3 பேர் வீட்டில் அமலாக்க துறை நடைபெற்று வருகிறது.
10:34 AM Mar 06, 2025 IST | Web Editor
Advertisement
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் 3 பேர் வீடுகளில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி கரூரில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2023 ம் ஆண்டு ஏற்கனவே அங்கு சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
Advertisement
இதுதவிர ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் மணி என்பவர் வீடு, கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் கார்த்தி வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.