கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் - விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
கல்லிடைக்குறிச்சி அருகே விளைநிலங்களை யானை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை
ஒட்டிய பகுதிகளில் யானைகள் முகாமிட்டு விளை நிலங்களை சேதப்படுத்தி
வருகின்றது. தற்போதைய சூழலில் நெற்பயிர்கள் கதிர் விடும் சூழல் உள்ளதால் அதன்
வாசனைக்கு ஏற்ப யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நெல் பயிர்களை
சேதப்படுத்தி வருகிறது.
மணிமுத்தாறு அணையில் இருந்து செல்லும் 80 அடி கால்வாயியையும் தாண்டி காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விவசாயிகள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், யானைகளை காட்டுக்குள் விரட்டு பணியில் வனத்துறையினர் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு..!
அந்த வகையில் நேற்று (பிப் - 05) இரவு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துனை
இயக்குனர் இளையராஜா தலைமையிலான 10 -க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பொட்டல் உள்ளிட்ட கிராம பகுதிகளில் முகாம் பட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும்
பணியில் மேற்கொண்டனர். தீப்பந்தங்களை கொளுத்தி குட்டிகளுடன் வலம் வரும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியினை மேற்கொண்டனர்.
தொடர்ந்து யானைகள் வரும் பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் இளையராஜா தெரிவித்துள்ளார். அதேபோல, நெல் அறுவடை பணிகள் முடியும் வரை வனத்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணிகளை மேற்கொண்டு விளை நிலங்களை சேதப்படுத்தாத வண்ணம் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள் என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா உறுதியளித்துள்ளார்.
வனத்துறையினர் இரவு நேரங்களில் முகாம்பட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டதால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.