For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் தங்களது நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது” - ஆக்சிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா வேதனை!

08:45 PM Jun 23, 2024 IST | Web Editor
“கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் தங்களது நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது”   ஆக்சிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா வேதனை
Advertisement

தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆக்சிஸ் மை இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். 

Advertisement

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) கருத்துக்கணிப்பு வெளியிட்டது. இந்த நிறுவனம் மட்டுமன்றி இந்தியாவின் முக்கிய ஊடகங்களும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-400 தொகுதிகள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.

ஆனால், தேர்தல் முடிவுகள் இதற்கு அப்படியே நேர்மாறாய் வந்ததோடு, கருத்துக்கணிப்புகளும் பொய்த்துப்போனது. பாஜக கூட்டணியால் 300 இடங்களைக்கூட தொடமுடியவில்லை, 294 இடங்களை மட்டுமே வென்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த பாஜக இந்த தேர்தலில் வெறும் 232 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும்பான்மையை இழந்தது.
தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பில், பாஜக பெரும்பான்மை பெறும் என்று கூறப்பட்டதால் பங்குச்சந்தையில் புள்ளிகள் பெரும் உச்சத்தைத் தொட்டன. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற குழு அமைத்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்த, தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளுக்குத் தடைவிதிக்கவும் சில தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் இந்த கருத்துக் கணிப்புகள் பணரீதியாக தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். எந்த ஊடங்களும் மிகப் பெரிய பணத்தை கள ஆய்வில் செலவழிப்பதில்லை. நாங்கள் செலவழித்து கருத்துக்கணிப்புகளை நடத்தினோம். எங்களது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags :
Advertisement