For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் தோல்வி - மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக ஜீத்து பட்வாரி நியமனம்.!

07:53 AM Dec 17, 2023 IST | Web Editor
தேர்தல் தோல்வி   மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக ஜீத்து பட்வாரி நியமனம்
Advertisement

தேர்தல் தோல்வியை தொடர்ந்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக ஜீத்து பட்வாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் முதல்வர் கமல்நாத் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஜீத்து பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தீபக் பாஜியை அப்பதவியில் தொடர மல்லிகார்ஜுனா கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

230 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 163 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 66 இடங்களே கிடைத்தன.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில பேரவைத் தேர்தல்களில் பாஜக வென்ற போதிலும், மத்திய பிரதேசத்தில்தான் மூன்றில் இருபங்குக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் அமோக வெற்றியை பதிவு செய்தது.

இந்தச் சூழலில், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் மாற்றப்பட்டு, புதிய தலைவராக ஜீத்து பட்வாரியை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை நியமித்தார். காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கமல்நாத்திடம் கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து  டெல்லி சென்று ராஜிநாமா கடிதத்தை அவர்  சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சத்தீஸ்கர் சட்டமன்ற குழு தலைவராக சரண் தாஸ் மஹந்தை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மல்லிகார்ஜுனா கார்கே ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement