For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

08:10 PM Nov 23, 2023 IST | Web Editor
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Advertisement

பிரதமர் நரேந்திர மோடியை தவறாக விமர்சித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

முன்னதாக, நாட்டில் 5 மாநிலத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களுக்குத் தேர்தல் முடிந்த நிலையில் ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுக்கு முறையே நவ. 25, நவ. 30 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் கடந்த செவ்வாய்க்கிழமை(நவ. 21) தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, 'உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்தனர். துரதிர்ஷ்டம் அவர்களை தோற்கச் செய்தது. நாட்டின் மக்கள் இதனை அறிவார்கள்' என்று பேசியுள்ளார்.

நேற்று(நவ.22) ராஜஸ்தான் பரத்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில், பேசிய ராகுல் காந்தி, 'பிக்பாக்கெட் அடிப்பவர்கள் தனியாக வருவதில்லை. 3 பேர் இருக்கிறார்கள். ஒருவர் திரையின் முன் தோன்றி மக்களின் சிந்தனையை சிதறடிக்கிறார். இன்னொருவர் பணத்தை எடுக்கிறார். மூன்றாவது நபர் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கிறார்' என்று பேசினார். இந்த பேச்சில் எங்கும் நேரடியாக பிரதமர் மோடியையோ அல்லது மற்ற நபர்களின் பெயரையோ ராகுல் காந்தி குறிப்பிடவில்லை.

இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பிரதமரை, ஒரு தேசிய கட்சியின் மூத்த தலைவரை 'பிக்பாக்கெட்'டுடன் ஒப்பிடுவதும் 'துரதிர்ஷ்டமானவர்' என்று கூறுவதும் பொருத்தமற்றது என புகார் வந்துள்ளது. மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக 14,00,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு உண்மைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படவில்லை என பாஜக கூறியுள்ளது. எனவே, இந்த புகார் தொடர்பாக ராகுல் காந்தி வருகிற நவ. 25 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement