டெல்லியில் தேர்தல் பிரசாரம் நிறைவு!
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இத்தேர்தலில் மொத்தமாக 981 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆட்சியைப் பிடிக்க ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த இரண்டு முறையாக தோல்வியை தழுவியது.
இதனால் இம்முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் எனும் முனைப்பில் காங்கிரஸும், மூன்றாவது முறை ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என ஆம் ஆத்மியும், தலைநகரில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும் பல தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.
குறிப்பாக பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் வார்த்தை போர் நிலவி வந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக காங்கிரஸும் கெஜ்ரிவாலை தாக்கி வந்தது.
இந்நிலையில் இன்று மாலையுடன் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது.