Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் பத்திர முறை - அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா?

09:46 AM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்பது குறித்து விரிவாக காணலாம்....

Advertisement

அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால்,  தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது.  இந்த சட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு,  தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த சட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விருப்பமான கட்சிகளுக்கு ரூ.1000 முதல் ரூ 1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கலாம்.  தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க தேவையில்லை.

இதையடுத்து,  இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது.  தேர்தல் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  "தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது,  உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தல் பத்திர நடைமுறை 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை ரூ.16,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பத்திரங்கள் விநியோகமாகியிருப்பதும்,  அதில் பெரும் பங்கு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சென்றிருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்ட  புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளதாவது..

Tags :
BJPCongressDelhiElectoral BondElectoral Bondspolitical partiesSupreme court
Advertisement
Next Article