For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கல்வி கடன்கள் வட்டி விகிதம் வேறுபடுவதால் சிரமம்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று தனது தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நான்கு நாட்களில் கூட்டுறவு வங்கியை திறந்து வைத்துள்ளார்.
01:20 PM Sep 30, 2025 IST | Web Editor
பொதுமக்களின் கோரிக்கை ஏற்று தனது தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நான்கு நாட்களில் கூட்டுறவு வங்கியை திறந்து வைத்துள்ளார்.
 கல்வி கடன்கள் வட்டி விகிதம் வேறுபடுவதால் சிரமம்    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Advertisement

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் கடந்த 1912 ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி முதல் 113 வருடமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த வங்கி தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவதன் மூலம் உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் வைப்புகள் பெறப்பட்டும் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2025 நிதியாண்டில் இந்த வங்கியில் 19 ஆயிரத்து 200 உறுப்பினர்களை கொண்டும் ரூ. 46 கோடி வைப்பு நிதியை ஈட்டியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் இந்த கூட்டுறவு வங்கிகள் மூலம் நகைக்கடன், வீடு அடமானக்கடன், பணியாளர் கடன், வைப்புக் கடன், வீடு கட்டும் கடன், சிறு வணிகக் கடன், பணிபுரியும் மகளிர் கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன், கூட்டுபொறுப்பு குழு கடன் மாற்றுத்திறனாளிகள் கடன், தேசிய சேமிப்பு பத்திக்கடன் தாட்கோ காம்போ டெப் சிட்கோ போன்ற கடன்கள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து புதிதாக திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இருதயபுர கூட்டுறவு வங்கியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இந்த வங்கியின் புதிய கிளையில் காட்டூர் இருதயபுரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 20 நபர்களுக்கு சிறுவணிகக் கடனும் மற்றும் வீடு அடமானக் கடனும் ரூ.133.75 லட்சம், மேலும் 5 குழுக்களை சேர்ந்த 58 நபர்களுக்கு ரூ. 29 லட்சம் கடன் என மொத்தமாக 92 நபர்களுக்கு ரூ.1.62 கோடி கடன் வழங்கப்பட்டது. மேலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"நான்கு வருடமாக ஆட்சி செய்து வரும் பல்வேறு துறை அமைச்சர்கள் சந்தித்து பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பேசி வருவதாகவும், அதுபோல் காட்டூர் பகுதிக்கு புதிதாக கூட்டுறவு வங்கி வேண்டுமென கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் கோரிக்கை வைத்ததாகவும் புதிதாக தொடங்குவதற்கு கால தாமதம் ஆகும். ஆனால் விவசாய தேவைக்க தற்பொழுது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்ந்த கூறியதாகவும், துவாக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு நமக்கு அனுமதி கிடைத்த நிலையில் அது ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்டு விட்டதாகும் அதை ஏன் விட்டுவிட வேண்டும் என்பதற்காகத்தான் தற்பொழுது நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவதற்கு கேட்டுள்ளதாகவும்,

அதே போல் இந்த பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கு வேளாண் துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளதாகவும், அது போல் ஒவ்வொரு துறை அமைச்சர்களையும் சந்தித்து நமக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு கோரிக்கை வைத்து வருவதாகவும், திருவெறும்பூர் தாலுக்காவில் நீதிமன்றம் அமைப்பதற்கு புதிய இடம் பார்த்து பார்த்து வருவதாகவும் அதேபோல் திருவெறும்பூர் தொகுதியில் விளையாட்டு, கல்வி, சுகாதார என திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி முழு நிறைவு பெற்றதாக மாற்ற வேண்டும்.

நமது மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா அவரது நிதியில் ரூ.2 கோடி நமது பகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கி தருவதாக கூறியுள்ளார். அப்பொழுது அப்பகுதி மக்கள் இந்த பகுதியில் பேருந்துகள் நிற்பதில்லை என்றும் மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பெண்களை தரக்குறைவாக பேசி நடத்துவதாக தெரிவித்தனர். அதற்கு அவர் அது போல் நடந்தால் உடனடியாக தெரிவியுங்கள் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவன் உயர்கல்வி பெறுவதற்கு வங்கிகளில் வழங்கப்படும். கல்வி கடன்கள் வட்டி விகிதம் வேறுபடுவதால் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் தான் பலர் கல்விக் கடனை அடைக்காமல் உள்ளார் என்று அமைச்சரிடம் கூறிய பொழுது இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்றும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement