பாராட்டு விழாவிற்கு மாட்டு வண்டியில் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி!
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,916 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் இன்று விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர்கள், ராதாகிருஷ்ணன், தாமோதிரன், தங்கமணி, முன்னாள் துணை சபாநாயகர், பொள்ளாச்சி ஜெயராமன், பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் வந்தார். பழனிசாமி உடன் எஸ்.பி.வேலுமணியும் மாட்டுவண்டியில் வந்தார். விழாவிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை மாட்டு வண்டியில் சீர்வரிசையாக கொண்டுவந்து எடப்பாடி வழங்கினர்.
ஊராட்சி வாரியாக சீர்வரிசை வழங்கப்பட்ட விவரம்;
பொங்கலூர் ஊராட்சியிலிருந்து மஞ்சள்
பிள்ளையப்பன்பாளையம் ஊராட்சியிலிருந்து நிலக்கடலை
கஞ்சப்பள்ளி ஊராட்சியிலிருந்து சுண்டல் கடலை
வடவள்ளி ஊராட்சியிலிருந்து மக்காசோளம்
பொகலூர் ஊராட்சியிலிருந்து கம்பு
காரேகவுண்டம்பாளையம் ஊராட்சியிலிருந்து ராகி
குப்பேபாளையம் ஊராட்சியிலிருந்து சின்னவெங்காயம்
கரியாம்பாளையம் ஊராட்சியிலிருந்து தக்காளி
தண்டுகாரம்பாளையம் ஊராட்சியிலிருந்து இளநீர்
வெள்ளாளபாளையம் ஊராட்சியிலிருந்து நெல்
ஒட்டர்பாளையம் ஊராட்சியிலிருந்து வாழைத்தார்
வடக்கலூர் ஊராட்சியிலிருந்து கரும்பு
ஆலத்தூர் ஊராட்சியிலிருந்து கருப்பட்டி
ஆம்போதி ஊராட்சியிலிருந்து வெல்லம்
தொரவலூர் ஊராட்சியிலிருந்து நெல்
தெக்கலூர் ஊராட்சியிலிருந்து தேங்காய்.