மிக்ஜாம் புயல் எதிரொலி : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!
மிக்ஜாம் புயலின் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, ‘மிக்ஜம்’ புயலாக வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4-ம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும்.
மிக்ஜாம் புயலானது கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் 290 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்,
ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.