Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராகுல் காந்தியின் பிரசாரத்தின் போது “மோடி.. மோடி..” என கோஷங்கள் எழுப்பப்பட்டதா?

10:13 AM May 27, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Newschecker

Advertisement

பிரசார மேடையில் ராகுல் காந்தி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, பொதுமக்கள் “மோடி... மோடி...” என கோஷங்கள் எழுப்புவதாக பரவிவரும் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி மேடையில் நின்று பேசுவது போலவும், கூட்டத்தின் நடுவே, “மோடி... மோடி...” என்ற கோஷங்கள் எழுப்புவது போலவும், அப்போது ராகுல் காந்தி, “மோடியின் படங்களை உங்களால் முடிந்தவரை காட்டுங்கள். எங்களுக்கு கவலையில்லை” என்று கூறும்படியும், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பலர், “ராகுல் காந்தியின் கூட்டத்தில் மோடி மோடி... அப்கி பார் 400 பார்” என்று தலைப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையை சரிபார்க்க Newschecker சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

உண்மைச் சரிபார்ப்பு:

வைரலாகிவரும் இந்த வீடியோவின் கீஃப்ரேம்கள் தலைகீழ் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. ​​அப்போது, மே 14 அன்று @shaandelhite என்ற ட்விட்டர் (எக்ஸ்) கணக்கில் இருந்து இதே வீடியோ பதிவிடப்பட்டது கண்டறியப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ராகுல் காந்தி உரையாற்றுவதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களை கொண்டு, அதே வீடியோ மே 14 அன்று ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது கண்டறியப்பட்டது. வீடியோவின் 47வது நிமிடங்களில், ராகுல் காந்தி,

“யூடிஏ காலத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததைப் போல, ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம். ஊடகங்கள் இதைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதட்டும். மோடியின் படங்களை எவ்வளவு வேண்டுமானாலும் காட்டுங்கள். நாங்கள் எங்கள் வேலையை செய்வோம்.” என கூறியது கண்டறியப்பட்டது. அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் "மீடியா கோ பேக்" என்று கோஷமிட்டதாக தெரியவந்தது.

முடிவு:

எனவே, ராகுல் காந்தியின் பேரணியில் மோடி... மோடி... என்ற கோஷங்கள் எழவில்லை எனவும், வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by ‘Newschecker’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
BJPcampaignCongressINCNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO IndiaRahul gandhi
Advertisement
Next Article