Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Assam-ல் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது!

01:57 PM Nov 04, 2024 IST | Web Editor
Advertisement

அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சாலை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நேற்று (நவ.3) கச்சார் மாவட்டத்தின் லைலாபூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகிக்கும்படி சென்ற வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 30 சோப்பு பெட்டிகளில் இருந்து 375 கிராம் ஹெராயின் மற்றும் 20,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள் : #RainAlert | 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

அந்த வாகனத்தின் ஓட்டுநரையும் போலீசார் கைது செய்தனர். இந்த போதைக்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி என கூறப்படுகிறது. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற நபரை கைது செய்த போலீசாருக்கு அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Tags :
ArrestassamCacharDrugsPoliceSay no to Drugs
Advertisement
Next Article