For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை!” - சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு!!

10:37 PM Nov 15, 2023 IST | Web Editor
“பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை ”   சத்தீஸ்கர் பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
Advertisement

பிரதமர் மோடி தன்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுவது குறித்து கவலையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Advertisement

சத்தீஸ்கரில் பலோடா பஜார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, 'பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அவர் தொடர்ந்து அப்படி பேசுவது நல்லதுதான். ஏனெனில் அவர் அப்படிப் பேசும்போது நான் சரியான விஷயங்களை செய்துகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்.

நான் எனது குறிக்கோளை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். மோடி, அதானிக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ அதே அளவு பணத்தை நான் ஏழை மக்களுக்குக் கொடுப்பேன். நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒரு ரூபாய் அதானிக்குக் கொடுத்தால் அந்த ஒரு ரூபாயை நான் ஏழைகளுக்கு கொடுப்பேன்' என்று பேசியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற நவ. 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement