For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடங்க உள்ளது... எப்போது தெரியுமா?

01:23 PM Apr 21, 2024 IST | Web Editor
தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடங்க உள்ளது    எப்போது தெரியுமா
Advertisement

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற நாளை முதல் மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியாா் சுயநிதி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1-ஆம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.  இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரைகட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.   இந்த நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டிற்கான இணையதள விண்ணப்ப பதிவு நாளை (ஏப்ரல் 22) முதல் தொடங்கி மே 20-ம் தேதி வரை நடபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம்,வட்டார வள மைய அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளன. எல்கேஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021 தேதிக்குள்ளும், 1-ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2018 முதல் 31.7.2019 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.

தொடர்ந்து, விண்ணப்ப பரிசீலனை மே 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்கப்படும்.  25 சதவீதத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தால்,  மே 28-ஆம் தேதி குலுக்கல் முறையில் சோ்க்கை நடத்தப்படும்.  சோ்க்கைக்கு தோ்வானோா், காத்திருப்போா் விவரம் ஆகியவை குறித்து மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.  சோ்க்கைக்கு தோ்வான குழந்தைகளின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement