Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தேர்தலில் திமுகவை வீழ்த்த போவது உறுதி" - டிடிவி தினகரன் பேட்டி!

தமிழகத்தில் போதை வியாபாரம் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
11:11 AM Jun 14, 2025 IST | Web Editor
தமிழகத்தில் போதை வியாபாரம் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிர்வாகி திருமண இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மணமக்களை வாழ்த்தி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "நான் தேசிய ஜனநாயக கூட்டணி, 2026 தேர்தலில் நாங்கள் செய்வதை பார்க்க போகிறீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணி உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து திமுகவை வீழ்த்துவதற்கு மும்முறமாக பணி செய்ய உள்ளோம்.

பாட்டாளி மக்கள் கட்சி 2019 முதல் பாஜக கூட்டணியில் உள்ளது. 21ல்  கூட்டணியில் இருந்தார்கள். 98ல் பாரதிய ஜனதா கட்சியில் முதல் முதலில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்தது புதிதாக கூட்டணியில் இல்லை.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பு இல்லை. பத்திரிக்கை செய்திகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு எங்கு பார்த்தாலும் தமிழகத்தில் போதை வியாபாரம் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது .

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நெசவாளர்கள் அனைத்து தரப்பிலிருந்தும் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக ஆட்சிக்கு எதிராக சாலையில் வந்து போராட்டம் நடத்துகிறார்கள். எத்தனை பெரிய கூட்டணியாக இருந்தாலும் இந்த தேர்தலில் தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த போவது உறுதி எங்கள் கூட்டணிக்கு வெற்றியை தருவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags :
2026electionChidambaramCMDMKElectionskadalurMKStalinPressMeetttv dhinakaran
Advertisement
Next Article