For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூய சவேரியார் பேராலய திருவிழா - கன்னியாகுமரிக்கு டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரியில் தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
12:26 PM Nov 28, 2025 IST | Web Editor
கன்னியாகுமரியில் தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தூய சவேரியார் பேராலய திருவிழா   கன்னியாகுமரிக்கு டிச 3ம் தேதி உள்ளூர் விடுமுறை
Advertisement

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

Advertisement

03.12.2025 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2025 டிசம்பர் திங்கள் முதல் சனிக்கிழமை (06.12.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 03.12.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement