"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறவே எடப்பாடி பழனிசாமி ஒதுங்கி நிற்கிறார்" - டி.டி.வி.தினகரன் பேட்டி!
திமுக வெற்றிபெறவே எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி இடைதேர்தலில் இருந்து ஒதுங்கி நிற்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைதேர்தலில் திமுக வெற்றிபெறவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடைதேர்தலிருந்து ஒதுங்கி நிற்கிறார் என மானாமதுரையில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படியுங்கள்: மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது!
அப்போது பேசிய அவர் கூறியதாவது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்டிஏ கூட்டனியில் உள்ள கட்சியினர் கடினமாக உழைத்து வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குசதவீதம் கடுமையாக சரிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றதற்காக நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள். 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது போல், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் தோல்வி அடையும்" இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.